tamilnadu

img

27 வங்கிகள் 12ஆக குறைப்பு

புதுதில்லி, ஆக.30- நாட்டில் இயங்கிவரும் 27 பொதுத்துறை வங்கிகள், 12ஆகக் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார். இவரது அறிவிப்பின்படி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைகிறது. இதன்மூலம் இது நாட்டின் பெரிய வங்கிகளின் வரிசையில் மூன்றாவதாக அமைந்திடும். யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைகின்றன. இதன்மூலம் இது பெரிய வங்கிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வங்கியாக அமைந்திடும். இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணைகிறது. இதன்பின்னர் இது பெரிய வங்கிகளின் வரிசையில் ஏழாவதாக இடம்பெறும். பஞ்சாப் நேஷனல் வங்கி, ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றம் யுனைடட் வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைகின்றன. இவ்வாறு இவை இணைவதன் மூலம் நாட்டின் பெரிய வங்கிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகின்றன.

பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி தொடர்ந்து இப்போதுள்ளது போன்றே தொடரும். இத்தகைய இணைப்பு களின் மூலமாக நாட்டில் இயங்கிவந்த 27 பொதுத்துறை வங்கி கள் 12 பொதுத்துறை வங்கிகளாக குறைகின்றன என்றார். தற்போதுள்ள 27 வங்கிகளின் விபரம் வருமாறு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியலா, ஸ்டேட் பாங்க்  ஆப் திருவாங்கூர், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க்  ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்பொரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஐடிபிஐ வங்கி, பாரதிய மகிளா வங்கி.                  (ந.ந.)