பெப்சிகோ நிறுவனம் ‘லேஸ்’ எனும் உருளைக்கிழங்கு வறுவலை இந்தியாவில் விற்று வருகிறது.இதற்குத் தேவையான உருளைக்கிழங்கு கிடைப்பதில் 2௦௦8இல் சிரமம் ஏற்பட்டது.அதனால் இந்த நிறுவனம் எப்ஸி5(குஊ5) என்ற ரக உருளைக்கிழங்கை 2009 இல் உண்டாக்கி அதை 2016இல் பயிர் பல்வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்(ஞஞஏ&குசுஹ) பதிவு செய்தது. இந்த உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து தனக்கு விற்பதற்கு 12௦௦௦ விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தன்னுடன் ஒப்பந்தம் போடாத விவசாயிகளும் இந்த வகை உருளைக்கிழங்கை குஜராத்தில் பயிர் செய்வதை ஒற்றர்களை அனுப்பி வாங்குபவர்கள் போல் நடித்து தெரிந்து கொண்டு வழக்கு பதிவு செய்தது. சிறு விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒரு கோடிக்கு மேல் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரியது.
விவசாயிகளின் நிலை என்ன?
அறிவுசார் சொத்து பாதுகாப்பு தொடர்பான உலக வர்த்தக மையத்தின் (றுகூடீ) உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக இந்தியாவில் 2௦௦1இல் ஏற்படுத்தப்பட்டதே பயிர் பல்வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் (ஞஞஏ&குசுஹ) .இதன் 64வது ஷரத்து, விதை கண்டுபிடித்தவரின் உரிமைகள், அதன் மீறல்கள், தண்டனைகள் குறித்து சொல்கிறது. பெப்சிகோ தன்னுடைய வழக்கை இதன் அடிப்படையில் தொடுத்துள்ளது. விவசாயிகள் இந்த சட்டத்தின் 39வது ஷரத்தின் அடிப்படையில் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கிறார்கள். இதன்படி முத்திரை(க்ஷசயனேநன) விதைகளைத் தவிர இந்த சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டதாக இருந்தாலும் மற்ற எல்லா விதைகளையும் ஒரு விவசாயி சேமிக்கலாம்; பயன்படுத்தலாம்; விதைக்கலாம்; மறுவிதைப்பு செய்யலாம்; பண்டமாற்றலாம்; பகிர்ந்துகொள்ளலாம்; தன்னுடைய விளைச்சலை விற்கலாம். ‘இந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விதிகளுக்கு மாறாக’ என்று இந்த ஷரத்து தொடங்குவதிலிருந்து இதற்கே முன்னுரிமை என்கிறார்கள் விவசாயிகள்.
ஏன் பெப்சிகோ வழக்கை திரும்பப் பெறுகிறேன் என்கிறது?
‘பெப்சிகோ பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கம் எழுந்தது. இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இதற்கு ஆதரவாக நின்றன. காங்கிரஸ், பாஜகவும் குரல் கொடுத்தன. சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பிரச்சினை முன்னிறுத்தப்பட்ட தருணத்தில் இது வலுப்பெற்றது. குஜராத் அரசாங்கம் முதலில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்றது. ஆனால் பின்னால் நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்ற நிலை எடுத்தது.
வேறு கோணங்கள் இருக்கின்றனவா?
வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் சிறு விவசாயிகளும் இருக்கிறார்கள். நான்கு ஏக்கர் அளவில் நிலம் வைத்திருக்கும் அவர்கள் இந்த விதைகளை உள்ளூர் கடைகளிலேயே வாங்கியதாகவும் அதை பயிர் செய்வதற்கு தங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது என்றும் ஒரு கோடி நஷ்ட ஈடு என்றால் அதை எங்கிருந்து கொடுப்பது என்றும் கேட்கிறார்கள். வழக்கில் பெரும் விவசாயிகளும் இருக்கிறார்கள். புல்சாந்த் கச்சஹவா என்பவர் 15௦ஏக்கர் நிலமும் குளிர் பதன கிடங்குகளும் வைத்திருப்பவர். அவர் விவசாயி மட்டுமல்ல வியாபாரியும் கூட. உருளைக்கிழங்கு விதைகளை விவசாயிகளுக்கு விற்பது; அவர்களது விளைச்சலை பெப்சிகோவின் போட்டியாளரான ‘பாலாஜி வேபர்’க்கு விற்பது போன்ற நடவடிக்கைகளை செய்பவர். இவருக்கு இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
அடுத்து என்ன?
விவசாயிகள் வெற்றி பெற்றதாக உணர்கிறார்கள். தங்களை துன்புறுத்தியதற்காக பெப்சிகோ நஷ்ட ஈடு தரவேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையில் சந்தேகம் கொள்கிறார்கள். நீண்ட கால சுமுக தீர்வு என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியின் பேரில் பெப்சிகோ வழக்கை வாபஸ் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. குஜாரத் அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இந்த வாக்குறுதியில் இடம் பெற்றிருக்கின்றன.உலக வர்த்தக மையத்தின் சட்டங்கள் இந்திய விவசாயிகளை எப்படி பாதிக்கும் என்பதற்கு இது ஒரு சோதனை வழக்கு என்கிறார்கள் விவசாய உரிமைக் குழுவினர். இதில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடாது; அது மற்ற பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்; இந்திய உணவுத் தன்னிறைவையும் பாதிக்கும் என்கின்றனர்.