ஸ்ரீசித்ரா இன்ஸ்டிட்யூட் மருத்துவர் தயார்
திருவனந்தபுரம், ஏப்.12- கொரோனா பாதிப்புக்கு உள்ளான வர்களுக்கு வழங்கப்படும் நவீன சிகிச்சை யான ‘ஆன்டிபாடி தெரபி’க்கு பிளாஸ்மா வழங்க, அந்நோயின் பிடியிலிருந்து மீண்ட ஸ்ரீசித்ரா மருத்துவர் உட்பட பலர் முன் வந்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக கேரள அரசு மேற்கொள்ளவிருக்கும் ‘கன்வாலஸ் சென்ட் பிளாஸ்மா’ என்கிற புதிய முறை யிலான சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்துள்ளது. கேரள அரசுக்காக திரு வனந்தபுரம் ஸ்ரீசித்ர திருநாள் இன்ஸ்டிட்யூட் பயோ மெட்டீரியல் சயன்ஸ் அன்ட் டெக்னா லஜி என்கிற மத்திய அரசின் நிறுவனம் இதற் கான ஆய்வை நடத்தி வருகிறது. ஆனால், நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஜெனரலின் (டிசிஐஜி) அனுமதி தேவை. இந்த அனுமதி கிடைத்தால் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவின் முதலாவது நபராக பிளாஸ்மா தானம் செய்ய ஸ்ரீசித்ர திருநாள் இன்ஸ்டி டியூட் மருத்துவர் முன்வந்துள்ளார். ஆனால், இது அதிகாரபூர்வமாக அங்கீக ரிக்கப்படவில்லை என ஸ்ரீசித்ரா இயக்குநர் டாக்டர்.ஆஷா கிஷோர் தெரிவித்தார்.
மார்ச் 13இல் ஸ்பெயினிலிருந்து திரும்பிய ஸ்ரீசி்த்ரா மருத்துவமனையின் மூத்த ரேடியோலஜிஸ்டான அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் பழக்கம் ஏற்பட்ட 76 ஊழியர்களும் அவர்களது குடும் பத்தினரும் வீடுகளில் கண்காணிப்பில் இருந்தனர். இவர் மார்ச் 26இல் நோயின் பிடி யிலிருந்து மீண்டார். நோயாளியின் விருப்ப பத்திரம் பெற்ற பிறகே பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். டிசிஐஜி அனுமதி கிடைத் தால் பிளாஸ்மா சிகிச்சைக்கான நடவடிக் கைகளை அரசு துவக்கும். கேரளம் சமர்ப் பித்துள்ள நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டால் மற்ற மாநிலங்களிலும் இவ்வாறான பிளாஸ்மா சிகிச்சை தொடங்கும்.