tamilnadu

img

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி மறுப்பு

புதுதில்லி, ஆக.7 - மேகதாது அணை கட்டுவதற்குச் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி மறுத்திருக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களும் ஒரு இணக்கமான தீர்வை உரு வாக்கினால் மட்டுமே அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு மேக தாது அணை திட்டத்துக்கு அனு மதிக்கக் கோரி வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய நீர் வள மற்றும்  சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்குக் கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவை யிலும் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுக் கூட்டத்தின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில்  அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி மறுக்கப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக் கட்டும் விவகாரத்தில் கூடுதல்  தகவல் அளிக்க வேண்டும் என்று கர்நாடகாவிடம் நிபுணர் குழு கோரியுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அம்மாநிலத்தின் ஒப்புதல் அவசியமாகிறது. எனவே இரு மாநிலங்களும் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு இணக்கமான தீர்வை எடுத்தால் மட்டுமே, அதுகுறித்து பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நிபுணர் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செவ்வாயன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து மேக தாது அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டுத் திட்டத்தின் முழு விவர அறிக்கையுடன் கடிதம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;