tamilnadu

img

மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது.... தில்லியில் இன்று தமிழக விவசாயிகள் போராட்டம்....

சென்னை:
மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 11) புதுதில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம்என்று தொடர்ந்து பேசி வருவது, தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.,காவிரி தொடர்பான பிரச்சனை யில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புமற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக இந்திய ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அணைகட்டுவது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததே தவறானதும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதும் ஆகும். இதன் மூலம் இந்திய ஒன்றியஅரசு கர்நாடகத்துக்கு சாதகமாக வும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச மான போக்கை மூடிமறைக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளது.

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் தண்ணீர்வராமல் வேளாண் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்படுவதுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு பாதகமான விளைவுகள் ஏற்படும். குடிநீர் பற்றாக்குறையால் ஒட்டு மொத்த தமிழகமும் பாதிக்கப்படும்.ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து கொண்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு பாக்கி தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரியின் மீது தமிழ்நாட்டிற்குரிய உரிமையை அங்கீகரிக்கா மலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் அடாவடித்தனமாக செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், இந்த செயலுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும்,மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 11மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுதில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் .சுப்பிரமணியன்  தலைமை தாங்குகிறார். தமிழ்நாட்டின் பாசன உரிமையை பாதுகாக்க நடைபெறும் இந்தஆர்ப்பாட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.