tamilnadu

மேகதாது அணையை எதிர்ப்போம்-வெற்றிபெறுவோம்... அமைச்சர் உறுதி....

சென்னை:
தமிழ்நாடு சட்டப் பேரவை வெள்ளியன்று காலை 10 மணிக்கு கூடியதும் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் தெரிவித்த கருத்து செய்தித்தாள்களில் வந்திருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய கட்சித் தலைவர்கள் மேகதாது அணை விவகாரத்தில் இந்திய ஒன்றிய பாஜக அரசு “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது” என்று குற்றம் சாட்டினர்.மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் டெல்டா மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.மேகதாது பிரச்சனையில் ஒன்றிய அரசு நடுநிலை தவறியிருப்பதால் காவிரி மட்டுமல்ல மேட்டூர் அணைக்கும் சொட்டுக்கூட வராது இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு உள் நோக்கத்துடன் செயல்படுகிறது நடுநிலை தவறு இருக்கிறது எனவே அரசு என்ன செய்யப் போகிறது என்று விளக்கம் தர வேண்டும் என்றும் கோரினர்.

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஒரே குரலில் எழுந்து நிற்பது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு போராட்டத்தை நடத்தலாம் என்றும் யோசனை கூறப்பட்டது.காவிரி நதி நீர் வாரியம் அமைத்து சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்த பிறகும் கர்நாடக அரசு தனது மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே இது குறித்து மீண்டும் விவாதிப்பதற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

இறையாண்மைக்கு எதிரானது!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நாகை மாலி, “மேகதாதுவில் அணைக்கட்டும் பணியை யார் தடுத்தாலும், எவர் தடுத்தாலும் நாங்கள் கட்டியே முடிப்போம் என்று கர்நாடக முதலமைச்சர் பேசியிருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே, தமிழகமே உடனடியாக ஒன்று திரண்டு கர்நாடக அரசின் முயற்சியை தடுத்தாக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும் என்ற கவலையோடும், உணர்வோடும் ஒன்று திரண்டு அணை கட்டும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்” என்றார்.

இரட்டை நிலை
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும் என்றும் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக பாஜக துணை நிற்கும் என்றும் இரட்டை வேடம் போட்டது.இதற்கு விளக்கம் அளித்த பொதுப்பணித்துறை எந்த காரணத்தைக் கொண்டும் கர்நாடக அரசு அணைக் கட்டக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் திட்டவட்டமான முடிவு. ஆனால், இந்திய ஒன்றிய அரசு  நினைத்த நேரத்திலும் மாநில அரசுகளை கலைக்கமுடியும் என்பதற்கு நீதிமன்றம் சென்று முற்றுப்புள்ளி வைத்தவர். அவது மகனான கர்நாடக முதலமைச்சர் பொம்மை தந்தை நீதிதவறமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை அரசியல் சூழ்நிலை, நெருக்கடி காரணமாக பேசியிருக்கலாம்.  எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் கொள்கை திட்டவட்டமாக  மறுப்பு தெரிவிக்க வேண்டிய இடத்தில் வாதாட வேண்டிய இடத்தில் வாதாடுவோம் வெற்றிபெறுவோம்” என்றார்.