tamilnadu

img

ராகுலை கட்டிவைத்து அடிக்க வேண்டுமாம்.. ‘தாத்தன்’ சாவர்க்கருக்கு தப்பாத ‘பேரன்’ சாவர்க்கர்

மும்பை:
தில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் பச்சாவ்’ பேரணி நடைபெற் றது. இதில் பங்கேற்றுப் பேசிய, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “நான்‘ரேப் இன் இந்தியா’ என்று நாட்டின்அவலநிலையைச் சுட்டிக் காண்பித்தமைக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், உண்மையைப் பேசியதற்காக நான் ஒரு போதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். எந்த காங்கிரஸ்காரனும் மன்னிப்பு கேட்க மாட்டான். ஏனெனில், என் பெயர் ராகுல் ‘காந்தி’. ராகுல்‘சாவர்க்கர்’ அல்ல” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது தாத்தா சாவர்க்கரை கொச்சைப்படுத்திப் பேசியதற்காக, ராகுல் காந்தியை பொது இடத்தில் கட்டிவைத்து அடிக்க வேண்டும் என்று வி.டி. சாவர்க்கரின் பேரன்ரஞ்சித் சாவர்க்கர் ஆத்திரம் அடைந் துள்ளார்.“பிரிட்டிஷ்காரர்களிடம் எனது தாத்தா சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக திரும்பத் திரும்பச் சொல்கிறார் ராகுல் காந்தி. சிறையிலிருந்து வெளியே வருவதற்கு எனது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போட்ட நிபந்தனைகளுக்கு மட்டும்தான் சம்மதித்தார். ஆனால், அவர் பிரிட்டிஷிடம் எப்போதும் மன்னிப்பு கேட்டதே இல்லை” என்று கூறியுள்ள ரஞ்சித் சாவர்க்கர், “ஜவஹர்லால் நேரு, ஒருபிரிட்டிஷ் விசுவாசியாக இருந்தார், 1946-ஆம் ஆண்டில் அவர், துணைராயல் கவுன்சிலில் ஒரு அமைச்சராகவும் இருந்தார், அதிகாரத்திற்கான பேராசையில், பிரிட்டிஷாரின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொண்டார்” என்றும் விமர்சித்துள்ளார்.மேலும், “சாவர்க்கரைக் கொச் சைப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்களை பொது இடத்தில் வைத்துதண்டிக்க வேண்டும்” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குகோரிக்கையும் விடுத்துள்ளார்.

;