tamilnadu

img

ரூ.18 ஆயிரம் கோடியை திரும்ப எடுத்துக் கொண்ட பெருமுதலாளிகள்... 6 மாதத்திற்குள் தலைகீழான நிலைமை

மும்பை:
இந்தியாவில், குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த தனியார் வங்கியாக ‘யெஸ் பேங்க்’ பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அந்த வங்கி அதலபாதாளத்தில் விழுந்துள்ளது. இந்த சரிவு யெஸ் வங்கிக்கு எப்படி ஏற்பட்டது? என்றுவிசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும், ‘யெஸ்’ வங்கியிலிருந்து, ரூ. 18 ஆயிரம் கோடி அளவிற்கான டெபாசிட்தொகையை பெருமுதலாளிகள் திரும்பப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 

‘யெஸ்’ வங்கியின் ஆண்டறிக்கையின் படி, 2019 மார்ச் 31 அன்று,அந்த வங்கியின் வைப்பு நிதி ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 610 கோடிஆகும். ஆனால், இது 2019 செப்டம்பர்30 அன்று, 2 லட்சத்து 9 ஆயிரத்து 497 கோடியாக- சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந் துள்ளது.குஜராத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் தொழில் நிறுவனம் ஒன்று தங்களின் வைப்புநிதியை மொத்தமாக திரும்ப எடுத்துக் கொண்டுள்ளது. அவர்களைப் போலவே திருப்பதி தேவஸ்தானம் ரூ. 1300 கோடியை திரும்ப எடுத்துள்ளது. வதோதரா முனிசிபல் கார்ப்பரேசனால் நிர்வகிக்கப்படும் வதோதரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கம்பெனி தங்களின் ரூ. 265 கோடியை ஆர்.பி.ஐ. ‘யெஸ்’ வங்கியை கைப்பற்றுவதற்கு சில மணி நேரத் திற்கு முன்பு எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், மற்ற வங்கிகளில், இதேகாலகட்டத்தில், ரெப்போ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக, வைப்புத் தொகைகள் 9.2 சதவிகிதம் உயர்வுகண்டன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

;