tamilnadu

img

வி.டி. சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதாம்

மும்பை:
வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.சாவர்க்கருக்கு மட்டும் விருது என்றால், எதிர்ப்பு வந்துவிடும் என்று கருதி, சமூகநீதிப் போராளிகளான மகாத்மா ஜோதிபா பூலே, அவரது மனைவியும் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியருமான சாவித்திரிபாய் பூலே ஆகியோரையும் பாரத ரத்னா விருதுப் பட்டியலில், பாஜக இணைத்துள்ளது.பாஜகவின் இந்த தேர்தல்அறிக்கையை, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் வரவேற்றாலும், மறுபுறத்தில் கண்டனங்களும் எழுந்துள்ளன. விடுதலைப் போராட்டத் தின்போது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, நாட்டையே காட்டிக் கொடுத்தவர், வி.டி. சாவர்க்கர், இந்து மகா சபையின் தலைவரான அவர், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் 7-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து தப்பித்தவர். மக்களை மத ரீதியாக துண் டாடும் இந்துத்துவா விஷவிதையை, நாட்டில் விதைத்த பிளவுவாதி. இப்படிப்பட்ட ஒருவருக்கு ‘பாரத ரத்னா’ தருவதா? என்று சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

;