tamilnadu

img

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை

இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்,  2020- இல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தகுதியடைந்துள்ளார்.

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை கண்ட வினேஷ் வெண்கலப்பதக்க போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவ்வெற்றியின் மூலமாக 2020-இல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்த முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

;