tamilnadu

img

ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள 2 தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை - முதலமைச்சர் உத்தரவு 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்கத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் பங்கேற்கத் தமிழகத்திலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும், கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஏழ்மை நிலையிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கச் சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் அரசுப் பணிக்கான ஆணையை முதலமைச்சர் வழங்குவார். அதற்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.