“ஆண்டுக்கு 3 சதவீதம் மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெறுக!”
ஆண்டுக்கு மூன்று சதவீதம் மின் கட்டண உயர்வு என்ற தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் அமைப்பு வலி யுறுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் பொதுச் செயலாளர் அருள் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மாநாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடிப்படை கொள்கை பிரச்சனைகள் விவாதிக்கப் பட உள்ளன. தமிழக அரசு மின்சார வாரி யத்தின் உற்பத்தி, தொடர் அமைப்பு, விநி யோகம் ஆகிய மூன்று பிரிவுகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி களை செய்து வருகிறது. இதில் மாற்றம் காண வேண்டும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மின் நுகர்வோர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சதவீதம் மின் கட்டண உயர்வு என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுத்திருக்கிறது. இதிலும் மாற்றம் காண வேண்டும். பொதுமக்கள், மின் நுகர்வோர்களுடன் விவாதித்து அரசு நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மின்சார வாரியத்தில் 65 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அடி மட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இத னால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காலிப் பணியி டங்களை நிரப்பாதது, கால தாமதப் படுத்துவது தனியார்மயமாக்கலுக்கு பின்புலமாக இருக்கிறதோ என கருத வேண்டியுள்ளது. காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசே கேரளாவில் உள்ளது போன்று செயல் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.