tamilnadu

img

“உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் துவக்கம்

“உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் துவக்கம்

கோவை, ஜூலை 15- அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப் பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் செவ் வாயன்று கடலூர் மாவட்டம், சிதம் பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுத் துறைகளின் சேவைகள் மற் றும் திட்டங்களை பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கி டும் வகையில், “உங்களுடன் ஸ்டா லின்” என்ற சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சிக் குட்பட்ட மருதமலை சாலை, வட வள்ளி, ஸ்ரீ காமாட்சி அம்மன் திரு மண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதில், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ் குமார், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணை யர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஈரோடு ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1, பவானி மெயின் ரோடு, பிளாட்டினம் மஹாலில் சிறப்பு திட்டத்தின் கீழ்  வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  சு.முத்துசாமி பொதுமக்களிடமி ருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். உதகை நீலகிரி மாவட்டம், குன்னூர் நக ராட்சிக்குட்பட்ட பாலகிளாவா ஜெயின் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டா லின்“ திட்ட முகாம் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை யில், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்க ளுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட  முகாம், துவக்க விழா சின்னமுதலைப் பட்டி சமுதாயக் கூடத்தில் ஆட்சி யர் துர்காமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. மாநிலங்களவை உறுப்பி னர் ராஜேஸ்குமார் முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படை யில் உடனடி தீர்வு காணப்பட்ட பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்வில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பி னர் ராமலிங்கம், மாநகராட்சி ஆணை யர் சிவக்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, வரு வாய் அலுவலர் சுமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.