tamilnadu

“தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே ரயில் விபத்துக்கு காரணம்”

“தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே ரயில் விபத்துக்கு காரணம்”

திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம்

திருவள்ளூர், ஜூலை 14 - தண்டவாளத்தில் இருந்த விரிச லால் ரயில் சக்கரங்கள் கீழே இறங்கி யதில் ரயிலில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித் துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற  திட்டம் செவ்வாயன்று தொடங்கப் பட உள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது. அப்போது திருவள்ளூரில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், “ஞாயிறன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 15  பெட்டிகள் முழுவதுமாக எரிந்து  போயின. இரண்டு பெட்டிகள் எரி யாமல் இருந்தன. அதிலிருந்த  டீசல் முழுவதும் மீட்கப்பட்டது.  தொடர்ந்து மற்ற பெட்டிகள்  பாதுகாப்பாக அப்புறப்படுத்தப் பட்டன. இரவு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மிக விரைவாக செயல்பட்டு 3 மற்றும்  4 ஆவது வழித்தடங்களை விரைவாக  தயார் செய்தனர். அதன் காரணமாக ரயில் போக்கு வரத்து திங்களன்று காலை 7.30 மணியளவில் தொடங்கப்பட்டது. இந்த விபத்தில், கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள ஆயில் எரிந்து வீணானது. ரயில் விபத்து நடைபெற்ற போது அருகில் இருந்த வர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப் பட்டார்கள். தற்போது திருவள்ளூரில்  இருந்து சென்னை செல்லக்கூடிய மின்சார ரயில்கள் குறைந்த அளவில்  இயக்கப்படுகின்றன. இதனிடையே, ரயில் விபத்து குறித்து மூன்று தனிப்படை அமைக்கப் பட்டு விபத்துக்கான காரணம் என்ன? என்று கண்டறியப்பட்டு வரு கிறது. முதல் கட்ட ஆய்வில், தண்ட வாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரண மாக விபத்து ஏற்பட்டு இருக்கிறது என தெரிய வந்துள்ளது. தண்ட வாளத்தில் விரிசல் ஒன்று இருந் துள்ளது. அதை ஆய்வு செய்த போது, இந்த விரிசலால்தான் ரயில் சக்கரங்கள் கீழே இறங்கி உரசிச் சென்று தீப்பொறி கிளம்பியுள்ளது. அப்போது இன்ஜின் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி தடம் புரண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பெட்டிகள் கீழே  விழுந்து எரிந்து உள்ளது. விரை வில் விரிவான ஆய்வறிக்கை வெளி யாகும். மேலும் ரயில்வே துறை யிடம் இந்த குறிப்பிட்ட தண்டவா ளங்களை எப்போது சீரமைத் தார்கள்? என்பது உள்ளிட்ட விசா ரணை அறிக்கையை கேட்டு உள்ளோம். இதுகுறித்து கோட்ட மேலாளரிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டு அவர் தலைமையில் கூட்டம் ஒன்று நடத்தப்படும்” என்றார்.