tamilnadu

img

‘திமுகவுடன்தான் மதிமுக கூட்டணி’

‘திமுகவுடன்தான் மதிமுக கூட்டணி’

தூத்துக்குடி: மனப்பூர்வமாக திமுகவுடன் கரம் கோர்த்து நாங்கள்  பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்; பணி ஆற்றுவோம் என்று தூத்துக்குடி யில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்தார். ‘ஸ்டெர்லைட் போராட்ட வரலாறு....  இன்றைய அரசியல்!’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வி.வி.டி.சிக்னல் அருகே மதிமுக சார்பில் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோ தும் அனுமதித்திடக் கூடாது. தமிழகத்தில் முதலமைச்சர்  ஸ்டாலின் ஆட்சி 2026 தேர்தலுக்குப் பின்னரும் மலர  வேண்டும். நாம் எங்கே எந்த கூட்டணியில் இருந்தாலும்  நன்றி விசுவாசத்தோடு உழைப்பவர்கள். இதில் ஆயிரம் கட்டுக் கதைகள், பொய்ச் செய்திகளை ஏடுகள் வெளியிடலாம். உக்ரைன்-ரஷ்ய போர் நடந்து  வரும் நிலையில், ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ  மாணவரை மீட்க உதவுமாறு துரை வைகோவிடம் மாண வரது பெற்றோர் கூறியுள்ளனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தவே மனிதாபிமான அடிப்படையில் பிரதமரை துரை. வைகோ சந்தித்தார். நான், கூட்டணி தர்மத்தை எப்போ தும் மதிப்பவன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி. அதில் எந்த  மாற்றமும் இல்லை” என்றார்.