தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரையடி அளவிற்கு மேவிய சேறு-சகதியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களின் கடும் உழைப்பால் அப்புறப்படுத்தி வருகின்றனர். இப்பணியின் ஏழு மற்றும் எட்டாவது நாட்களில் ஏரல் சிறுதொண்டநல்லூர், உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சேற்றை அகற்றி பள்ளியை தூய்மைப்படுத்தினர். இதில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.