tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு துணை நின்ற வாலிபர் சங்கம்! மதுரை, திண்டுக்கல், அவிநாசியில் சமூகப் பொறுப்புடன் கைகோர்த்த இளைஞர்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு துணை நின்ற வாலிபர் சங்கம்!மதுரை, திண்டுக்கல், அவிநாசியில் சமூகப் பொறுப்புடன் கைகோர்த்த இளைஞர்கள்

மதுரை, அக். 21 - தீபாவளிக்குப் பின் குவிந்த குப்பை களை அகற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அளித்த ‘உழைப்பு தானம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது.  மதுரை, திண்டுக்கல், அவிநாசி, கூடலூர்  (நீலகிரி) ஆகிய இடங்களில் களமிறங்கிய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டினர். மதுரையில் 6-ஆவது ஆண்டாக உழைப்புக் கொடை மதுரை கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, விளக்குத்தூண், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில், அக்டோபர் 21 செவ்வாயன்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் 6-ஆவது ஆண்டு  ‘உழைப்புக் கொடை’ கொட்டும் மழை யிலும் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் தி. நாக ராஜன், தூய்மைப் பணியில் பங்கேற்று உழைப்புக் கொடையைத் துவக்கி வைத்தார்.  வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், மாநகர் மாவட்டத் தலைவர் டி. செல்வா, செயலாளர் எஸ். வேல்தேவா, பொருளாளர் க. கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் சுபஸ்ரீ, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டீலன் ஜஸ்டின் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். துணை மேயர் தி. நாகராஜன் பேசுகை யில், “தூய்மைப் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் வாலிபர் சங்கம் கடந்த  6 ஆண்டுகளாக இப்பணியைச் செய்கிறது.  இன்றைய இளைஞர்கள் சமூக நல னுக்காகக் கைகளை நீட்டி உதவி செய்வது  மகத்தானது. இந்த மகத்தான பணியை மன தாரப் பாராட்டுகிறேன்” என்று நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டார். மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக்  கூறுகையில், “மதுரையில் தொடங்கிய இம்முயற்சி இப்போது தமிழ்நாட்டின் பல  மாவட்டங்களில் நடைபெறுகிறது. பண்டி கைக் காலங்களில் குப்பைகள் இரட்டிப்பா கும் நிலையில், பணியாளர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை இல்லாத போதும் அவர்கள் தங்கள் கடமையை உணர்வுப் பூர்வமாகச் செய்கிறார்கள்” என்றார்.  மாநகராட்சி ஆணையாளர் சித்ரா  விஜயனும் இளைஞர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இப்பணியில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவி அர்ச்சனா, தனது அனுப வத்தைப் பகிர்கையில், “வீட்டுக் குப்பை களை எடுக்கவே சிலர் தயங்கும் நிலை யில், தூய்மைப் பணியாளர்கள் தினமும் பல மடங்கு குப்பைகளை அகற்றி நகரைச் சுத்த மாக வைத்திருக்கிறார்கள். இவர்களின் பணிக்கு உதவுவது நமது சமூகப் பொறுப்பு” என்று வலியுறுத்தினார். ஐடி ஊழியர் மைதிலி பேசுகையில், “உடைந்த மது பாட்டில்கள் பணியாளர் களுக்குக் காயத்தை ஏற்படுத்தும். அவற்றை குப்பையில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி அவர்களுக்குப் பாது காப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். திண்டுக்கல் மாநகரில்  ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பங்கேற்பு! திண்டுக்கல் மாநகராட்சி முன்புள்ள பஜார் வீதி, குப்பை மேடாகக் காட்சியளித்த சாலைகளைச் சுத்தம் செய்யும் பணியில், வாலிபர் சங்கத்தினரோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தமும் இணைந்து உழைத் தார். அவர் துடைப்பம் கொண்டு குப்பை களைக் கூட்டி, சாக்குப் பைகளில் அள்ளினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ரஞ்சித், செயலாளர் கே. முகேஷ், பொருளாளர் எம். பிரேம் குமார், இணைச் செயலாளர் எம். அசோக் சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் ஏ. அரபுமுகமது, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் நிருபன், சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் கணேசன் உள்ளிட்டோர் இம்முயற்சியில் கைகோர்த்தனர். அவிநாசி மற்றும் கூடலூரிலும் கரம் கோர்ப்பு: திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி யில், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வடி வேல், ஒன்றியப் பொருளாளர் தங்கராஜ், துணைத் தலைவர் நந்தகோபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ஜீவ பாரதி, பத்ரன் ஆகியோர் தலைமையில் செல்லாண்டியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் வாலிபர் சங்கத்தினர் - தூய்மை பணியாளர்களுடன் கரம் கோர்த்தனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரப் பகு தியிலும் வாலிபர் சங்கத்தினர் இணைந்து, மலை போல் குவிந்திருந்த பட்டாசுக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை அகற்றிச் சமூகப் பொறுப்பை செலுத்தினர். சமூக அக்கறையுடன் இளைஞர்கள் மேற்கொண்ட இந்த “உழைப்புக் கொடை” இயக்கம், தூய்மைப் பணியாளர்களுக்கு உற்சாகம் அளித்ததுடன், இளைஞர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பையும் உணர்த்தி, நகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.