tamilnadu

img

கொரோனா பரவலை தடுக்க வாலிபர் சங்கத்தின் மக்கள் பணி

மதுரை
கொரோனா நோய் பரவிவருவதை தடுக்கும் விதமாக மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாநகர்  மாவட்டக்குழு சார்பில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக  பல்வேறு தடுப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.  

குறிப்பாக தெரு பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது, முகக் கவசங்கள் வழங்குவது, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது, நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் வறுமையில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் உணவு பொருட்கள் வழங்குவது, கபசூர குடிநீர்  வழங்குவது என்று பகுதிகுழு வாரியாக இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிராமிய கலைஞர்களுக்கு  வாலிபர் சங்க   மதுரை  மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகுழு , அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் உணவு பொருட்களை சனிக்கிழமையன்று வழங்கினர்.
புதூர்- அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில் காந்திபுரம் பகுதியில்  கபசூர குடிநீர்  பொது மக்களுக்கு  வழங்கப்பட்டது.

முனிச்சாலை பகுதிகுழு சார்பில் தெய்வகனி தெரு( வடக்கு, தெற்கு ) கிறிஸ்தவர் தெரு, சூசை மைக்கேல் தெரு, அம்பேத்கார் நகர் ஆகிய இடங்களில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மதுரையில் அனைத்து ஆலய திருவிழாக்களிலும் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு விசிறி வழங்கி  மகிழ்விப்பவர் விசிறி தாத்தா. அவரின் தேவையறிந்தும் அவரை நேரில் சந்தித்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி  உதவி  செய்தார்கள் வாலிபர் சங்க நிர்வாகிகள்.

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் அரிசி,பலசரக்கு பொருள்கள் மதுரை  மாநகர் முழுவதும் உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
 

;