வாலிபர் சங்க பீளமேடு மாநாடு
கோவை, ஜூலை 8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பீளமேடு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டம், பீளமேடு நகர மாநாடு திங்களன்று நடைபெற்றது. இம் மாநாட்டில் பீளமேடு நகரத் தலைவர் ராஜேந்திரன் மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் நிசார் துவக்க வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா நிறைவுரையாற்றினார். இதில், ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்களில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு ‘ரைட் டூ டிஸ்கனெக்ட்’ (பணி நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளப்படாமல் இருக்கும் உரிமை) முறையை அமல்படுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் புதிய நகரக் குழுத் தலைவராக ஸ்ரீதர், செயலாளராக சக்திவேல், பொருளாளராக சந்துரு மற்றும் 15 பேர் கொண்ட நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஏராளனோர் கலந்து கொண்டனர்.