tamilnadu

img

நிழற்குடை அமைத்து தரக் கோரி வாலிபர் சங்கம் குடை பிடிக்கும் போராட்டம்

நிழற்குடை அமைத்து தரக் கோரி  வாலிபர் சங்கம் குடை பிடிக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.27 - திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் காட்டூருக்கு அருகே அமைந்துள்ள மஞ்சத்திடல் பேருந்து நிறுத்தத்தின் நிழல்  குடையின் மேற்கூரை கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பெயர்ந்து விழுந்தது. தற்போது  வரை மேற்கூரை இல்லாததால், பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பேருந்து நிறுத்த மேற்கூரையை நெடுஞ் சாலைத் துறை உடனடியாக அமைத்துத் தர  கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  சார்பில் சனிக்கிழமை மஞ்சத்திடல் பேருந்து  நிறுத்தத்தில் பயணிகளுக்கு குடை பிடிக்கும்  போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பகுதி குழு தலைவர் சுபாஷ், செயலாளர் யுவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் பா.லெ னின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் சந்தோஷ், முன்னாள் வாலிபர் சங்க தலைவர் பாலு ஆகியோர் பேசி னர். போராட்டத்தில் ஆட்டோ நிலைய நிர்வாகிகள் வெங்கட், சின்ராஜ், பாபா,  சரவணன் பங்கேற்றனர். பகுதி பொருளா ளர் ரவி நன்றி கூறினார்.