tamilnadu

img

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக் கோரி வாலிபர் சங்கம் முற்றுகை

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக் கோரி வாலிபர் சங்கம் முற்றுகை

மயிலாடுதுறை, ஜூலை 29-  கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கண்முன் நிற்கும் காலப்பெட்டகம் கீழடியைப் பாதுகாப்போம். வரலாற்றை மாற்றத் துடிக்கும் வஞ்சக மோடி அரசே! அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தலின்றி உடனடியாக வெளியிடு என முழக்கமிட்ட போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைத் தலைவர் பவுல் சத்யராஜ், மாவட்ட துணைத் தலைவர் எம்.குமரேசன், வட்டச் செயலாளர் ஆர்.ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வி.குமார், ஹெச்.சபீர் அகமது, கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் லெனின் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டப்படி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறை தடுப்புகளை வைத்து தடுத்ததையும் மீறி வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தை நடத்தினர்.