tamilnadu

img

‘எங்களது வாழ்க்கையை மோடி நாசமாக்கிவிட்டார்’

சென்னை, ஜூன் 18 அக்னிபாத் திட்டம் அறிவிக்கப் பட்டது முதலே சர்ச்சையாகி வந்த நிலை யில், நாடு முழுக்கப் பல்வேறு மாநி லங்களில் இதை எதிர்த்துப் போராட் டங்கள் கடுமையாக நடைபெற்று வரு கின்றன.  தமிழகத்தில் வேலூரில் கவனிக்கத் தக்க வகையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை சென்னை  தலைமைச் செயலகத்தில் 200-க்கும்  மேற்பட்ட இளைஞர்கள் சனிக்கிழமை காலை போராட்டத்தை துவக்கினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமைச்  செயலகம் அருகே தேசியக்கொடி யுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். ‘அக்னி பாத்’ திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று  இளைஞர்கள் தெரி வித்தனர்.

ஏன் இந்த போராட்டம்?

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலையில்  நடந்த அத்தகைய ஆட்சேர்ப்பு முகா மில், சென்னை, திருவள்ளூர், செங்கல்  பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கட லூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரியிலிருந்தும் 24 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்  களது, கல்வி சான்றிதழ் சரிபார்க்கப் பட்டு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப் பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்  கொள்ளப்பட்டது. இதில், தேர்வு செய்  யப்பட்டவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு அறி விக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதில் ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த எழுத்து தேர்வுக்காக நாடு முழு வதும் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி  பெற்ற சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட  இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டு களாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘எங்கள் குரலைக் கேட்க ஆளில்லை’

“நாங்கள் நாட்டுக்காக உழைக்கத் தயார் என்று காத்திருக்கும் வேளையில், எங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளை இந்த அரசு செய்கிறது,” என்கிறார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஓர் இளைஞர். “மோடி எங்களது வாழ்க்கையை நாசமாக்கி விட்டார். பயிற்சி முடித்து இரண்டு ஆண்டுகள் காத்துக்கிடக்கி றோம். நாள்தோறும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க அதிகாலை யில் எழுந்து ஓடுகிறோம்.கடும் பனியில் ஒடும்போது மூக்கில் ரத்தம் வரும். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பாடுபடலாம் என்று கனவில் அதை யெல்லாம் பொறுத்துக்கொண்டோம்.  சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதித் தேர்வு ஆகியவை முடித்து எழுத்துத் தேர்வுக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தால் எங்களது வாழ்க்கையை மத்திய அரசு நாசம் செய்து விட்டது. 4 ஆண்டு திட்டத்தில் சேர்ந்தால் ஒன்றரை ஆண்டு பயிற்சியிலேயே கழிந்துவிடும். மீதமுள்ள மாதங்களில் என்ன கற்றுத் தரப் போகிறார்கள்? எனவே முன்பு இருந்ததை போலவே ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்” என்றார் அவர்.

திட்டமிட்டு சதி

கொரோனா காலத்தில் தேர்தல்கள், அரசியல் கூட்டங்கள், பள்ளி கல்லூரித் தேர்வுகள் எல்லாம் நடத்தப்பட்டபோது எங்களுக்கான தேர்வை மட்டும் நடத்த முடியவில்லையா?” என்று மற்றொரு இளைஞர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முழுக்க இருந்து எங்க ளைப் போன்ற ஏராளமானவர்கள் இணைந்துகொண்டே உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவ தில்லை என்று அவர் ஆவேசமாக கூறினார். எங்களுக்கான சிஇஇ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும், அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இந்த இரண்டும் நடைபெறும் வரை தொடர்ந்து போராடுவது என்பதில் உறு தியாக உள்ளோம். தற்போது எங்களை ராஜரத்தினம் மைதானத்தில் வைத் துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும்  கூடி போராட்டத் தில் ஈடுபடுவோம் என்றனர்.