tamilnadu

img

உலக உடல் உறுப்பு தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக உடல் உறுப்பு தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஆக. 13- 2025 ஆம் ஆண்டு உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, ஓசூர் காவேரி மருத்துவமனையின் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியும் பிரச்சாரமும் ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகில் நடைபெற்றது.  ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கொடியசைத்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அவர் தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டார். பொதுமக்கள், மருத்துவர்கள், பணியாளர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 700 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதியமான் பொறியியல் கல்லூரி தலைவர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் 6 குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகமது ஷபீர், ஓசூர் சாராட்சியர் ஆக்ரிதி சேத்தி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரி வித்தனர். உடல் உறுப்பு தானம் உயிர் கொடுக்கும் உயர்ந்த செயல் என்றும், ஒருவரின் உடல் தானம் 8 பேரைக் காப்பாற்றி வாழவைக்கும் என்றும் தெரி விக்கப்பட்டது. காவேரி மருத்துவமனையில் உடல் தானம், சிறுநீரகம், மருத்துவமனை பொது முதன்மை இயக்குநர் விஜயபாஸ்கர், ஓசூர் கிளையின் மேலாளர் ஜோஸ் வர்கீஸ், இதயம் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.