தலேமா நிறுவனத்தை மூட எதிர்ப்பு டவர் மீது ஏறி தொழிலாளர்கள் போராட்டம்
சேலம், ஆக.2- சேலத்திலுள்ள தலேமா நிறுவனத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெள்ளியன்று டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், புது ரோடு அருகில் செயல்படும் தலேமா எலக்ட்ரானிக் நிறுவனம் லே ஆப் நாட்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். சட்டவிரோதமான ஆட்குறைப்பு மற்றும் ஆலையை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனது. இதற்கென தனி அதிகாரியை அந்நிறுவனம் நியமித்துள்ளது. இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று பெண்கள் உட்பட திரளான தொழிலாளர்கள், ஆலை முன்புள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.