tamilnadu

img

பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரை அதிகம் பயன்படுத்த கூடாது!

பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரை  அதிகம் பயன்படுத்த கூடாது!

காவல்துறை விளக்கம்

சென்னை, ஜூலை 6 - பெண் போலீசாரை பாது காப்பு பணியில் அதிகம் பயன் படுத்தக் கூடாது என அறிவுறுத் தியது குறித்து தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, “கடந்த ஜூன் 30 ஆம்  தேதி காணொலி வாயிலாக மாவட்ட, மாநகர அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. அதில், பெண் போலீசாரை பாது காப்புப் பணியில் அதிகம் பயன்படுத்த வேண் டாம் என அறிவுறுத்தப்பட்டது. போக்சோ குற்றங்கள், பெண்கள், குழந் தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்கு களை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க  வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த ஆலோசனை வழங்கப் பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, போக்சோ வழக்கு களில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், வழக்கு களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, பாதுகாப்பு பணிக்கு பெண் போலீ சாரை நியமிக்க வேண்டாம் என தெரி விக்கப்பட்டது. பெண் குற்றவாளிகளை கைது செய்தல், குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் மற்றும் பெண்  சாட்சிகளின் வாக்குமூலங்களை விசாரித்து பதிவு செய்தல், பாதுகாப்பு பணியில் பெண்களின் கூட்டத்தைக் கையாளுதல் போன்ற பணிகளை பெண் போலீசார் மட்டுமே  செய்ய வேண்டும் என்பதால், வழக்கமான முறையில் மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு பெண் போலீசார் அழைத்துச் செல்லப்படு வதில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.