tamilnadu

img

சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் மாதர், வாலிபர், மாணவர், தொழிலாளர் அமைப்புகள் மகளிர் தின கோரிக்கை சாசனம்

சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் மாதர், வாலிபர், மாணவர், தொழிலாளர் அமைப்புகள் மகளிர் தின கோரிக்கை சாசனம்

சென்னை, மார்ச் 7- 2026 சட்டமன்றத் தேர்தலை யொட்டி மாதர், வாலிபர், மாணவர்,  தொழிற்சங்கங்கள் சார்பில் சனிக்கிழ மையன்று (மார்ச் 7) சென்னையில்  கோரிக்கை சாசனம் வெளியிடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி நடைபெற இந்நிகழ்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்  கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. அப்போது பேசிய தலைவர்கள் அரசியல் கட்சிகளுக்கு வேண்டு கோள் விடுத்தும், புதிதாக அமை யும் அரசு நிறைவேற்ற வேண்டிய அம்சங்களையும் விளக்கினர். அதன்  சுருக்கம் வருமாறு: ‘போக்சோ வழக்குகளுக்கு தனி நீதிமன்றம் வேண்டும்!’ மாதர் சங்கத்தின் பொதுச்செய லாளர் அ. ராதிகா பேசுகையில், “நகர்ப்புற வேலை உறுதித் திட் டத்தை சட்டமாக்க வேண்டும், போதை கலாச்சாரத்தை தடுக்க  டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை யை குறைக்க வேண்டும், அனைத்து  மாவட்டங்களிலும் போக்சோ வழக்கு களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். இணையதள குற்றங்களை தடுக்கும் பணியை மேம்படுத்த வேண்டும். சாதி ஆண வக் கொலை தடுப்பு சிறப்புச் சட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மாவட்ட அளவில் மாதந்தோறும் ஆட்சியர் தலைமையில் மகளிர், குழந்தைகள் குறைதீர்ப்பு முகாம்  நடத்த வேண்டும், 13 முதல் 19 வயது  குழந்தைகள் கருத்தரித்தல் அதி கரித்து வரும் நிலையில், குழந்தை கள் நலக் கொள்கையை அரசு உரு வாக்க வேண்டும். குழந்தைகள் பாது காப்பு ஆணையம் செயல்பட தேவை யான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்  டும்” என வலியுறுத்தினார். இதனை  அடுத்து அமையும் அரசு நிறைவேற்ற  வேண்டும் என்றும் கோரினார். அமைப்புசாரா துறையிலும் மகப்பேறு கால சலுகை  சிஐடியு அகில இந்திய துணைத்  தலைவர் மாலதி சிட்டிபாபு பேசுகை யில், “பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆஷா, அங்கன்வாடி போன்ற திட்டப்  பணியாளர்களை நிரந்தரம் செய்ய  வேண்டும். அரசுத் துறைகளில் உள்  ளதுபோல் தனியார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மகப் பேறு கால சலுகை வழங்க வேண் டும். துணிக்கடை போன்ற பெண்கள் அதிகம் பணியாற்றும் இடங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டுமென்ற உத்தரவை அரசு கறாராக அமல்படுத்த வேண்  டும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு, தோட்டம் மற்றும் பீடித் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதி செய்ய வேண்டும். நல வாரிய பலன்கள் பெண் தொழிலாளர்  களுக்கு முழுமையாக கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என் றார். ‘தனியார் - ஐடி நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை’  “அரசுத் துறைத் தேர்வுகளுக் கான இலவச பயிற்சி மையங்களை அரசு நடத்த வேண்டும். அனைத்து  பணியிடங்களையும் அரசுத் தேர்வு கள் மூலம் நிரப்ப வேண்டும். பெருநக ரங்களில் நகர்ப்புற வேலை உறுதி  திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களில் உள் ளூர் மக்களுக்கு முன்னுரிமை மற்  றும் ஒதுக்கீடு தர வேண்டும். கிக்  தொழிலாளர்களுக்கு சமூக பாது காப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வேலையில்லாக் கால நிவாரணத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஒப்பந்த, தொகு ப்பூதிய முறைகளை ஒழித்து அனை வரையும் நிரந்தரம் செய்ய வேண்  டும்” என்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் அபிராமி கூறினார். ‘மாணவிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை’ இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா பேசு கையில், “லிங்டோ குழு பரிந்து ரைப்படி மாணவர் பேரவை தேர்  தலை நடத்த வேண்டும். கல்வி நிலை யங்களில் நிகழும் பாகுபாடுகளை தடுக்க கர்நாடகா போன்று தமிழகத்தி லும் ரோகித் வெமுலா சட்டத்தை கொண்டு வர வேண்டும். விடுதி மாண வர்களின் உணவுப்படியை இரட்டிப்  பாக்க வேண்டும். கல்வி நிலையங்க ளில் உள்ள புகார்க் குழுக்களை செயல்படும் அமைப்புகளாக மாற்ற  வேண்டும்” என்றார். “உயர்கல்வி வளாகங்களில் இலவச வை-பை வசதி வழங்க வேண்டும். கல்வி வளாகங்களில் சுகாதாரமான கழிப்பிட வசதியை ஏற்படுத்துவதோடு, இலவச நாப்கின் கள் மற்றும் அவற்றை எரிக்கும் எந்திரத்தை நிறுவ வேண்டும். மாணவிகளுக்கு மாதாமாதம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பல்கலை. உறுப்புக் கல்லூரி களை அரசுக் கல்லூரிகளாக மாற்ற  வேண்டும். மருத்துவக் கல்லூரி களை போன்று மாவட்டத்திற்கு ஒரு  சட்டக் கல்லூரியை தொடங்க வேண்  டும். கல்வி வளாக சாதிய பாகு பாட்டை தடுக்க நீதிபதி சந்துரு பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.  கேரள அரசைப் போன்று இளங்  கலை படிப்பை இலவசமாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வெளிப்படுத்தி னார். ‘பெண்களுக்கு சமவேலைக்கு  சம ஊதியம் தர வேண்டும்’ “ஒரு கோடி விவசாயத் தொழி லாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘விவசாயத் தொழி லாளர்கள் நலவாரியம்’ அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200ஆக உயர்த்தி 700 ரூபாய் கூலி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும். ஓய்வூதியமாக மாதம் 5 ஆயிரம்  ரூபாய் தர வேண்டும். குறைந்த வட்டி யில் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க வேண்டும். நலிவடைந்த பிரிவினருக்கும் உயர் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்” என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோதண் டம் தெரிவித்தார். ‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்’ அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் பேசுகையில், “எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்து ரைத்தபடி வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்  தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  ஒன்றிய அரசை அரசியல் கட்சிகள் வற்புறுத்த வேண்டும். 60 வயதான விவசாயிகள், விவ சாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யம் வழங்க வேண்டும். விளைநிலங் களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற  பெயரில் விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்” என்றார்.