பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
அரியலூர், செப்.10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் உதவி ஆய்வாளர் சுபா ஆகியோர், வன்கொடுமை மற்றும் தீருதவி பற்றியும், பட்டியலின மக்களுக்கு அரசு வழங்கும் கடனுதவி சலுகைகள் பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.