tamilnadu

பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.யிடம் பெண் மனு

பாதுகாப்பு கேட்டு  எஸ்.பி.யிடம் பெண் மனு

பெரம்பலூர். ஜூலை 17-   பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (51). இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது துரைப்பாண்டியன் தனது 2- வது மனைவியான அமுதாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைப்பாண்டியனின் தம்பி மணிவேல்(48), இவரது மனைவி பிரியவதனி, இவர்களது மகன் பிரவீன் மற்றும் துரைப் பாண்டியனின் முதல் மனைவியின் மகன் பவித்ரன் ஆகியோருக்கும், துரைப்பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தன்னையும் தனது கணவரான துரைப்பாண்டியனையும், மேற்படி உறவினர்கள் அடியாட்களை வைத்து தினமும் திட்டியும், எங்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம் அமுதா மனு அளித்தார்.