பட்டாசு தடை விவகாரத்தில் நிதானப் போக்கு தேவை’ என கருத்து பட்டாசுத் தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்றுமா, உச்சநீதிமன்றம்
பட்டாசு தடை விவகாரத்தில் நிதான போக்கு தேவை என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதி களில் பட்டாசுகள் விற்பனைக்கு- 2016 நவம்பரில், முழுமையாக விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால் என்ப வர் கடந்த ஆண்டு மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தில்லி மற்றும் என்சிஆர் (National Capital Region - NCR) பகுதியில் பட்டாசு விற்பனை க்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. பின்னர், 2017 செப்டம்பர் 12-இல் நடை பெற்ற விசாரணையின் போது, இந்தத் தடை யைத் தற்காலிகமாக நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பசுமைப் பட்டாசு அத்துடன், ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக். 23 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கினர். அதில், “அனுமதிக்கப்பட்ட ஒலி மற்றும் புகை வரம்பு களுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மட்டுமே நாடு முழுவதும் விற்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளாக இருக்க வேண்டும். சரவெடி பட்டாசுகள், காற்று, ஒலி, திடக்கழிவு பிரச்சனை ஆகியவற்றுக்கு வித்திடுகிறது. எனவே, அவற்றின் தயாரிப்புக்கும், விற்ப னைக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், பட்டாசு ஆலைகளில் பேரியம் உப்புப் பயன்படுத்தப்படுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பட்டா சுகள் குறிப்பிட்ட பகுதியில் விற்காமலிருப்ப தை, அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வா ளர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விதிமீறல்களுக்கு ஆய்வாளர்களே பொறுப்பாவர். பட்டாசு களின் தீமை, விளைவுகள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள், பள்ளி கள், கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ள வேண்டும். தீபாவளி மற்றும் மற்ற விழாக்காலங்களில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படு கிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய வற்றின் போது நள்ளிரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தீபாவளிக்கு 7 நாட்கள் முன்பும், 7 நாட் களுக்குப் பின்னரும் காற்றில் அலுமினியம், பேரியம், இரும்பு ஆகியவற்றின் அளவை அறிந்து கொள்ளும் வகையில், அந்தந்த நகரங்களில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங் கள், மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகி யவை குறுகியகாலக் கண்காணிப்பை மேற் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனிடையே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம்- காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையுமாக அனு மதி வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த தீர்ப்பில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்ற கட்டுப்பாடு மாற்றியமைக்கப்பட்டது. கொரோனா காலத்தில்.. கொரோனா காலத்தில் மாசடைந்த நகரங் களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் என்ஜிடி விதித்த ஒட்டு மொத்த தடையை உறுதி செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தில்லி தேசிய தலைநக ரப் பகுதிகளிலும், 200-க்கும், அதற்கும் அதிக மாகக் காற்றின் தர குறியீட்டுடன் மோசமான பிரிவுகளில் பதிவாகும் (மாசடைந்துள்ள) நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் அனைத்து வகையான பட்டாசுகளை விற்க வும், வெடிக்கவும் ஒட்டு மொத்தமாக தடை விதித்தது. மிதமான காற்றின் தரக் குறியீடு உள்ள மாநகரங்கள், நகரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி மட்டுமே வெடிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் குறைந்தபட்சம் ஒரு காற்றின் தர கண்காணிப்பு மையத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் இருக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் உத்தரவிட்டது. தில்லியில் தடை இதன்படி தில்லியில் அனைத்து வகை யான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்ப னை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டது. பின்னர், தில்லியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் விநியோ கத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. ஜனவரி 1 2023 வரை இந்தக் கட்டுப்பாடு நடைமுறை யில் இருக்கும் எனத் தில்லி மாசு கட்டுப் ப்பாட்டு வாரியம் கடந்த 2022 செப்டம்பர் 14 அன்று உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்தக் கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனு வை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2021 செப்டம்பர் இறுதியில், “சிலரின் வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பிற மக்களின் வாழும் உரிமையைப் பறிக்க முடியாது. வேலைவாய்ப்புக்கும், வேலை யின்மை மற்றும் குடிமக்களின் வாழ்வ தற்கான உரிமைக்கும் இடையிலான விஷ யங்களைச் சமமாகப் பார்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பசுமைப் பட்டாசு களை நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்தால் அதற்கு ஏற்றாற்போல உத்தரவுகளைப் பிறப்பிப்போம். சட்டங்கள் இருக்கின்றன. அவை அமல்படுத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழுமை யாகக் கடைப்பிடிக்க வேண்டும். இருப்பி னும் ஏதுமறியா குடிமக்களின் வாழும் உரிமை குறித்து அக்கறை கொள்ள வேண்டியுள்ளது” என்றது. இந்நிலையில், தேசிய தலைநகரப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்தக் கோரி பட்டாசு உற்பத்தியாளர் கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடை யீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி கள் பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முக்கியம் அப்போது, “தேசிய தலைநகரப் பகுதி யில் உள்ள மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உரிமையுள்ளது என்றால் ஏன் நாட்டின் பிற மாநகரங்களில் உள்ள மக்க ளுக்கு அந்த உரிமை இல்லையா? கடந்த குளிர்காலத்தில் அமிர்தசரஸ் தங்க கோவி லுக்குச் சென்றிருந்தபோது தில்லியைக் காட்டிலும் காற்றின் தரம் மோசமாக இருந்தது. தில்லி நாட்டின் தலைநகர் என்ப தாலும், உச்சநீதிமன்றம் இங்கு இருப்ப தாலும், நாட்டின் பிற மாநகரங்களில் சுத்த மான காற்றைச் சுவாசிக்க உரிமை இல்லையா? பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர் பாக நாடு முழுவதும் ஒரே கொள்கை உரு வாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும், பட்டாசுக்கு தடை என்றால் அது நாடு முழுவதுமானதாக இருக்க வேண்டும், அதே சமயம் பட்டாசு உற்பத்தி தொழிற் சாலையை நம்பி இருக்கும் ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பி.ஆர். கவாய் கூறியிருந்தார். முழுமையான தடை தீர்வாகாது அதேபோல, “அர்ஜுன் கோபால் வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழு வதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைநகர் தில்லியில் பட்டாசு வெடிப்ப தற்கும் விதிக்கப்பட்டுள்ள தில்லி அரசின் தடையை உறுதி செய்த உச்சநீதி மன்றத்தின் உத்தரவு முரண்பாடாக உள் ளது. இதனால், பட்டாசு உற்பத்தியாளர் களின் உரிமங்கள் ரத்துச் செய்யப்பட்டன. அவற்றில் சில உரிமங்கள் 2028-ஆம் ஆண்டு வரை செல்லத்தக்கவையாக இருந்தன. தீபாவளி பண்டிகை நெருங்கு வதால் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதி டப்பட்டது. ஒன்றிய அரசும் பட்டாசுக்கு முழுமையான தடை விதிப்பது தீர்வாகாது” என்று கடந்த விசாரணையின் போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் வாதிட்டது. உச்சநீதிமன்றத்துக்கு உதவ நிய மிக்கப்பட்ட வழக்கறிஞர் அபராஜிதா சிங், பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர் களுக்கு வழங்கப்பட்ட க்யூஆர் கோடுகள் பசுமையல்லா பட்டாசு உற்பத்தியாளர் களுக்கு விற்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி னார். நிதானமான செயல்திட்டம் வேண்டும் அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “பீகாரில் மணல் குவாரிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், மாஃபியாக்கள் தடையை மீறி மணல் குவா ரிகளை நடத்தி வந்ததைபோல, பட்டாசு களுக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமை யாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தூய்மை யான காற்றையும், பட்டாசு உற்பத்தி ஆலை தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நிதானமான போக்குத் தேவையாகிறது. தில்லி தேசிய தலைநகரப் பகுதிகளில் பசு மைப் பட்டாசுகளை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் ஏற்ற வகையில் செயல்திட்ட த்தை உருவாக்கி அளிக்கப் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனை யாளர்கள், உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோருட னான கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்த வேண்டும். அதுவரை, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) பெட்ரோலியம், வெடிபொருள் பாது காப்பு அமைப்பு (பெஸோ) அனுமதி பெற்றுள்ள தேசிய தலைநகரப் பகுதிகளி லுள்ள ஆலைகள் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம். ஆனால், மறு உத்த ரவு பிறப்பிக்கும் வரை அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ‘பட்டாசு தடை விவகாரத்தில் நிதான போக்கு தேவை’ என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து, நாடு முழுவதும் 1403 பட்டாசு உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
