பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் அப்புறப் படுத்தப்படுமா?
பாபநாசம், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாசம் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த ரெகுநாதபுரம் ஊராட்சியில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் வெள்ளா ளத் தெரு, அக்ரஹாரம், முதலியார் தெரு, அம்பலக்காரத் தெரு, காளி யம்மன் கோயில் தெரு, மாதா கோயில் தெரு, பால விநாயகர் கோயில் தெரு, குட்லக் நகர் உள்ளிட்ட சில நகர்கள் உள்ளன. மெயின் சாலையை ஒட்டியுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்த கார ணத்தால், குடமுருட்டி ஆற்றுக்கு செல்லும் சாலை அருகே புதிதாக ஊராட்சி மன்ற அலு வலக கட்டடம் கட்டப்பட்டு, அங்கு அலுவ லகம் மாறிய பின்னரும், பழைய கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால், பழுதடைந்த கட்டடத்தை இடிக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று இதன் அருகிலேயே உள்ள நூலக கட்டடமும் பழுதடைந்ததால், பயன்பா டின்றி உள்ளது. அதில் இருந்த ரேக்குகள், புத்தகங்கள் என்னவானது என்று தெரிய வில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதன் அருகில் உள்ள கால்நடை மருத்துவக் கிளை நிலைய கட்டடமும் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. இந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.