tamilnadu

மீனங்குடி கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யாமல் பில் எடுப்பதா?

மீனங்குடி கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யாமல் பில் எடுப்பதா?

விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு இராமநாதபுரம், செப்.19- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலை வர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவ சாயிகள் அளித்த கோரிக்கை மனுக்க ளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.மயில்வாகணன் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப் பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு பாதி பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்பட்டுள்ளது. பணம் வரவு செய்யப்  படாத விவசாயிகளுக்கு உடனே வங்கிக்  கணக்கில் வரவு வைத்திட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணத் தொகை உடனே வழங்க வேண்டும். சவுடு மணல் எடுக்க அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ன என கேள்வி எழுப்பினார். மீனங்குடி கிரா மத்தில் உள்ள காலனி பகுதிக்கு காவிரி  கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யாமல் பில் எடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித் தார்.  அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்  தலைவர் கூறுகையில், நீர் நிலைகளை தூர்வார நடவடிக்கை வேண்டும். கண்மாய்  களில் சவடு மண் அள்ளுவதற்கு அனு மதிக்கப்பட்ட இடங்களில் கூடுதலாக மண் எடுப்பதாக புகார் வருவதையொட்டி, அலு வலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விவ சாயிகளுக்கு போதிய அளவு பண்ணை குட்டைகள் அமைத்தல், சாலைகள் சீர மைத்தல், பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி தருதல், தாழ்வான மின் வயர்கள் செல்வதை சீர் செய்தல் மற்றும் போதி யளவு வேளாண்மைத் துறையின் மூலம்  உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள்  விற்பனை செய்ய கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தொடர்புடைய துறை அலு வலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குநர் (பொ)  பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் வாசுகி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.