வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோக்களை பகிரும் வசதி அறிமுகம்!
வாட்ஸ்அப்பில், லைவ் போட்டோக்களை (Live Photos) அதன் அசல் வடிவில் மற்ற வர்களுக்கு பகிரும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோக்களை பகிர்ந்தால் அது நிலையான still image-ஆக அனுப்பப் படும். GIF-ஆக அனுப்பினாலும் அதில் அசைவுகளை பார்க்கவும், ஆடியோவை கேட்கவும் முடியாது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லைவ் போட்டோவில் ஆடியோவும், அசைவுகளும் மாற்றமின்றி அசல் வடிவில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். நமக்கு அனுப்பப்படும் லைவ் போட்டோவின் thumbnail-இல் இருக்கும் சிறிய ஐகான் கிளிக் செய்தால், ஆடியோவையும் கேட்க முடியும். தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா 25.24.10.72 பதிப்பில் இந்த வசதி கிடைக்கிறது. வரும் வாரங்களில் அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட உள்ளது. லைவ் போட்டோக்களை, ஐஓஎஸ் போட்டோ செயலியில் சேமித்தாலும் அதன் அசல் வடிவம் மாறாது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் லைவ் போட்டோக்கள், motion photos-ஆக காணப்படும். ஆண்ட்ராய்டு கருவியில் இருந்து அனுப்பப்படும் motion photos-ஐ, ஐஓஎஸ் பயனர்களால் Live Photos-ஆக காண முடியும். இதனால் எந்த சாதனமாக இருந்தாலும் dynamic photos சரியாகக் காட்சியளிக்கும்.
ஆடர்கள் டிராக் செய்வதை எளிதாக்கிய ஜிமெயில்!
ஆடர்கள் டிராக் செய்வதை எளிதாக்கும் வகையில், ஜிமெயிலில், Purchase Tracking View என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் நீங்கள் எப்போது, எந்த விற்பனையாளரிடமிருந்து என்ன பொருட்களை வாங்கினீர்கள் என்பதையும், ஆர்டர் விவரங்கள், shipping status, ரசீது (invoice) போன்ற தகவல்களையும் நேரடியாக ஜிமெயில் வழியாக பார்த்துக்கொள்ளலாம். இதனால், பயனர்கள் ஒவ்வொரு முறையும் பொருள் விற்பனை செய்த வெப்சைட்டுக்கும் தனித்தனியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஜிமெயிலின் “Purchase Tracking View” மூலமாகவே உங்கள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தகவல்களையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்.
தொலைந்த பொருட்களை கண்டறியும் கருவி!
ஏர் டேக் என்னும் சிறிய கருவி, தொலைந்த உங்கள் சாவி, பை, பைக் உள்ளிட்ட பொருட்களை கண்டறிய உதவும் ஒரு டிராக்கிங் கருவியாகும். ஏர் டேக் என்பது ஆப்பிள் சாதனங்களுடன் இணைக்கக்கூடிய சிறிய கண்காணிப்பு கருவி. இதை உங்கள் முக்கியமான பொருளில் பொருத்தினால், அது Apple’s Find My app-இன் மூலம் அந்தப் பொருளின் இருப்பிடத்தை (location) காட்டும். Bluetooth-இன் மூலம் அருகில் இருந்தால் கண்டுபிடிக்கலாம்; Ultra Wideband (UWB) தொழில்நுட்பம் மூலம் மிகத் துல்லியமான திசை மற்றும் தூரத்தையும் காட்டும். தொலைந்த பொருள் அருகில் இருக்கும்போது, நீங்கள் ஆப்-இல் இருந்து ஒரு ஒலியை எழுப்பும்படி செய்தால், ஏர் டேக் ஒலி எழுப்பி, பொருளைக் கண்டறிய உதவும்.