விஜய் மவுனியாக இருக்கும் போது மற்றவர்கள் பதறி என்ன ஆகப் போகிறது? பெ.சண்முகம் கேள்வி
சென்னை, ஜன. 8 - தணிக்கைச் சான்றிதழ் வழங்கப் படாத தால், தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவது தள்ளிப் போயிருப்பது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம், தமது சமூகவலைதளப் பக்கத் தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் தணிக்கை வாரி யத்தின் செயல் குறித்து சம்பந்தப் பட்ட ‘ஜனநாயகன்’-னே வாய்மூடி மவுனி யாக இருக்கிறார். வாரியத்தைக் குறை சொன்னால், ஒன்றிய பாஜக அரசை குறை சொன்ன தாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனா லும் பரவாயில்லை தன்னை பாது காத்துக் கொண்டால் போதும் என்று தான் எதுவும் சொல்லாமல் இருக்கி றார். மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன கதறி என்ன ஆகப்போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
