tamilnadu

img

மீண்டும் வரலாற்றுப் பாதையில் மேற்கு இந்தியத் தீவுகள்

உள்ளூர் டி-20 போட்டிகளின் ஆதிக்கத்தாலும், போதுமான அளவில் நட்சத்திர வீரர்கள் இல்லாததாலும் சின்னா பின்னமாகி 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாமல் சோகத்தில் மூழ்கியது. இதனால் மேற்கு இந்தி யத் தீவுகள் அணிகளின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா விற்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளை கொண்ட தொட ரில் ராணுவத்திற்கு நிகரான பயிற்சி யுடன் களமிறங்கிய மேற்கு இந்தி யத் தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை இழந்தாலும் ஆட்டத்திற னில் ஓரளவு முன்னேற்றம் கண்டது.  இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் டி-20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படு த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி  3-2 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப் பற்றி பட்டையை கிளப்பியது. இந்த  வெற்றியை இந்தியா மட்டுமல்ல கிரிக் கெட் உலகமே எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி அசத்தியது. இந்த குறுகிய கால எழுச்சி மீண்டும் வரலாற்றுப் பாதையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.