tamilnadu

img

கரூரிலிருந்து 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை தொடங்குவோம் : உதயநிதி ஸ்டாலின்

கரூரிலிருந்து 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை தொடங்குவோம் : உதயநிதி ஸ்டாலின்

கரூர்,செ கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.  “முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலாக நின்று வென்ற இந்த மாவட்டத்திலிருந்து 2026 தேர்தலுக் கான வெற்றிக் கணக்கை தொடங்குவோம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேசுகையில், “பெருமழையிலும் இங்கு நின்றுக் கொண்டிருக்கும் கட்சியினரைப் பார்க்கும் போது, எந்தத் தேர்தலையும், எந்தப் பகைவர்களையும் வென்று காட்டுவோம். வெற்றி நிச்சயம்” என்று உறுதியளித்தார்.  கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலும், துணை முதல்வருக்கு வெள்ளி வாளும் வழங்கி கவுரவித்தார். “இந்த முப்பெரும் விழாவிலிருந்து 2026 தேர்தல் வெற்றிக்கான எண்ணிக்கை துவங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டார். மழையிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த விழா திமுகவின் அடுத்த தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.