திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எல்.டி.எப் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன் மக்களின் மனங்களை வென்று முன்னேறி வருகிறார். நெய்யாற்றின்கரை, பாறசாலை, நேமம், திருவனந்தபுரம், வட்டியூர்காவு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் மற்றும் தலைவர்களை மார்ச் 20 புதனன்று பன்னியன் ரவீந்திரன் சந்தித்தார். மாலையில் முஸ்லிம் சங்க மண்டபத்தில் இப்தார் விருந்தும் இடம்பெற்றது. சகோதரத்துவம் மற்றும் நட்புறவு செய்தியை பரப்பும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பன்னியன் ரவீந்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.