tamilnadu

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் பிரச்சனை இலங்கையுடன் தெளிவான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் பிரச்சனை இலங்கையுடன் தெளிவான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!

சிஐடியு வலியுறுத்தல்

இராமநாதபுரம், அக். 11 -  இலங்கை கடற்படை தொடர்ந்து  தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில், இந்தப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண,  இலங்கை மற்றும் இந்திய மீன வர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கடல் தொழி லாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் என்.பி. செந்தில் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: இராமேஸ்வரம், நாகப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவது தொடர்கி றது. இதற்கு ஒன்றிய பாஜக அரசு,  இலங்கை அரசுடன் தெளிவான பேச்சுவார்த்தை நடத்தாததே காரணம்.  இராமேஸ்வரத்தில் இருந்து 15 நாட்டிக்கல் தூரத்தில் கச்சத்தீவு உள்ளது. கச்சத்தீவை மீட்டாலும் பிரச்  சனை தீராது. ஏனெனில் அங்கிருந்து  மேலும் 10 கிலோ மீட்டர் சென்றால் தான் இறால் மீன்கள் கிடைக்கும். இலங்கை பகுதியில்தான் இறால் மீன்கள் முட்டையிடும் சகதி மணல் உள்ளது. தென்கடல் பகுதியில் மீன்பிடிக்  கும் மிகப்பெரிய படகுகள் பாக்.  ஜலசந்தி பகுதியில் மீன்பிடிப்பதா லும், தடை செய்யப்பட்ட அதிக குதி ரைத் திறன் இன்ஜின்களை பயன் படுத்துவதாலும், இரட்டை மடி, ரோலர் மடி வலைகள் மூலம் மீன்  பிடிப்பதாலும் மீன்வளம் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் கரையோர நாட்டுப்படகு மீனவர்கள் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, பாஜக ‘கடல் தாமரை’ மாநாடு நடத்தியது. இன்று  ஒன்றிய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், இந்த மாநாட் டில் பேசியபோது, மீனவர் பிரச்ச னைகளை தீர்ப்போம் என்றார். இது  கண்துடைப்பாகவே உள்ளது. பெரிய  படகுகளை தென்கடல் பகுதி களுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இலங்கை, இந்திய மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு என்.பி. செந்தில் தெரி வித்தார்.