tamilnadu

img

சாதிய - பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்!

சாதிய - பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்

தமிழக அரசுக்கு  ஏ.ஏ. ரஹீம் எம்.பி. கோரிக்கை கிருஷ்ணகிரி, செப். 27 - சிறுமியர், மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும் என்று, வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ. ரஹீம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18-ஆவது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை யொட்டி, மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் நடை பெற்றது. இதில், சங்கத்தின் அகில இந்திய தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஏ.  ரஹீம் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர் களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: 5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், போதைப்  பழக்கத்திற்கு எதிராகவும், சாதி ஆணவப் படு கொலைக்கு எதிராகவும், சிறுமியர், மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வும் தொடர்ந்து போராடும் லட்சியம் கொண்ட  அமைப்பாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, வாலிபர் சங்கம் மிகவும் வளர்ச்சியடைந்த சங்கமா கும். 5 லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு, கல்வியறிவிலும் மக்களுக்கான போராட்டத்திலும் வேலை வாய்ப்புக்காக போராடுவதிலும் முன்நிற்கக்கூடிய ஒரே இளைஞர் அமைப்பாகும். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தொடர் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயச் சாவு கள் நடந்தபோது அதற்கு எதிராகவும், போதைப் பழக்கம் - கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவும் வாலிபர் சங்கம் கடுமையாக போராடியது. அதே போல் இளைஞர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டபோது அதற்கு எதிராகவும், அண்மையில் வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை வட்டத் துணைத்தலைவர் வைர முத்து சாதிய ஆணவ படுகொலை செய்யப் பட்டதற்கு எதிராகவும் நீதி கிடைத்திட கடுமையாக போராடியது வாலிபர் சங்கம்.  போதைப் பழக்கத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதி ராகவும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக வும் மிகப் பிரமாண்டமான கையெழுத்து இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. அதில் நானும் பங்கேற்றிருந்தேன். அந்த இயக்கத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டா லின் துவக்கி வைத்தார் என்பது வாலிபர் சங்கத் திற்கு பெருமை சேர்க்கக்கூடியதாகும். மேலும் வாலிபர் சங்கம் சார்பில் மதுரையில்  “ஆதலால் காதல் செய்வீர்” என்று மாபெரும் இயக்கம் சாதிய வன்கொடுமைக்கும் சாதிய  ஆணவ படுகொலைக்கும் எதிராக நடத்தப் பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.  வெங்கடேசன் அதை தலைமை தாங்கி நடத்தி னார். இது சாதி, மத பாகுபாட்டை ஒழிப்பதற்கும், ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்குமான மாபெரும் இயக்கமாக இருந்தது. எங்கள் நாடாளு மன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் அது நடைபெற்றது. மக்களை ஒன்றுபடுத்தும் வாலிபர் சங்கம் மக்களை ஒன்றுபடுத்துவதில் நாங்கள் மிக வும் உறுதியாக இருக்கிறோம். மக்களைத் துண்டா டும் சங்கப் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக  அனைத்து மக்களையும் அனைத்து வாலிபர் களையும் ஒன்றுபடுத்தும் வேலையை வாலிபர் சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. ஒசூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிலும்  அகில இந்திய மாநாட்டிலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை, அது ஏற்படுத்தும் பிரச்ச னைகள் குறித்து தொடர்ந்து வாலிபர் சங்கம்  போராட்டம் நடத்தி வருகிறது. படித்த பட்டதாரி வாலி பர்கள் 6.8 சதவிகிதம் பேர் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். புதிய கடுமையான சட்டம் அவசியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிக் கப்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் மேற்கூறிய அனைத்து லட்சியங்களுக்காகவும் போராடிவரும் நிலையில் மாணவியர், சிறுமியர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுகிறோம். முதல்வர் சொல்வது போல் சிறுமிகள் மாணவிகள் பாலியல் வன்கொடு மைக்கு எதிராக பழைய சட்டங்களே போதுமென் றால் தற்போது ஏன் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆகவே, புதிய கடு மையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு ஏ.ஏ. ரஹீம் எம்.பி. கூறினார். சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.