tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை அரசு கொண்டு வரும் என்று நம்புகிறோம்!

சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை அரசு கொண்டு வரும் என்று நம்புகிறோம்!

சென்னை, செப். 17 -  சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் கூறினார். தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளான புதனன்று சென்னை  அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பெ. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பெரியாரைப் பின்பற்றுவோரின் கடமை இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “சாதிய - மதவாத - சனாதன சக்திகளுக்கு  எதிராக வாழ்நாள் முழுவதும் போரா டியவர் தந்தை பெரியார்; தமிழ்நாட் டில் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள், சமூக ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை என அனைத்து விதமான ஒடுக்கு முறைகளையும் ஒழிக்க பாடுபட்ட வர்; அவருடைய கொள்கை களை பிரச்சாரம் செய்யவும், நடை முறைக்கு கொண்டுவருவதற்கு மான தொடர் நடவடிக்கைகளை பெரியாரைப் பின்பற்றக்கூடிய அனைவரும் மேற்கொள்ள வேண் டும்” என்று கேட்டுக் கொண்டார். “தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலை அன்றாட நிகழ்வாக இருப்பது வேதனைக்குரியது” என்று கூறிய பெ. சண்முகம், செப்ட ம்பர் 15 அன்று மயிலாடுதுறையில் வைரமுத்து என்ற இளைஞர் சாதி வெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேத னையளிப்பதாக” குறிப்பிட்டார்.  “சாதி ஆணவப் படுகொலை களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், அரசு தாமதப்படுத்தாமல் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். பஞ்சமி நில விவகாரம் குறித்துப்  பேசிய அவர், “பட்டியல் சாதி மக்கள் முன்னேறுவதற்கு, மிக  அடிப்படையானது நிலம்” என் றார். “ஆங்கிலேய ஆட்சிக் காலத் தில் பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பலர் அப கரித்துள்ளனர்” என்று குற்றம்சாட்டி னார். “பஞ்சமி நிலத்தை மீட்டு, பட்டி யல் சாதி மக்களிடம் ஒப்படைக்க ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை களை எடுக்க வில்லை” என்றார். புறம்போக்கில் குடியிருப்போரிடம் வேகம் காட்டும் நிர்வாகம் இது சம்பந்தமாக உச்சநீதி மன்றமும் - உயர்நீதிமன்றமும் அளித்துள்ள தெளிவான தீர்ப்பு களை, வருவாய்த்துறையும், அரசும் அமல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பெ. சண்முகம், மாறாக, புறம்போக்கில் குடியிருப்போரை வெளியேற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மட்டும் கறா ராக அமல்படுத்துகிறார்கள் என்று விமர்சித்தார். மக்களின் வாழ்வுரி மையை பாதுகாக்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்றும் பட்டியல் சாதி மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்டு வழங்க வேண்டும் என்றும் கூறினார். செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்த பெ. சண்முகம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் களை நேரில் சந்திக்கும் போதெல் லாம், மக்கள் நலன் சார்ந்த  கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக கூறினார். சாதி ஆணவப் படு கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி, சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் இணைந்து முத லமைச்சரை நேரில் சந்தித்து வலி யுறுத்தியதாகவும், ஆணவப்படு கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, இ. சர்வேசன், எஸ்.கே. முருகேஷ், எஸ்.வி. வேணுகோபாலன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர். கபாலி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. சுந்தரம், எம். பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.