அமைச்சரிடம் நல்ல பதில் எதிர்பார்க்கிறோம்: அ.சவுந்தரராசன்
சென்னை, செப்.1 - இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திங்களன்று தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர்கள் நடராஜன், ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், 15 மாதங் களாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை பரிசீலிப்பதாகவும், நிதித்துறை அதி காரிகளுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாகவும் அமைச்சர் தெரி வித்தார். பணியில் இருப்பவர்களுக் கான நிலுவைத் தொகையை ஒரு வாரத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கான ஓய்வூதியம் வழங்க 2023இல் அமைக்கப்பட்ட குழு ஒருமுறை மட்டுமே கூடியுள்ள தாக தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தக் குழுவை உடனடியாக கூட்டுவதாக அமைச்சர் உறுதியளித்தார். ஓய்வுபெற்றோ ருக்கான அகவிலைப்படி, மருத்து வக் காப்பீடு, வாரிசு வேலை ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப் பட்டன. முன்னதாக, 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரை ஓய்வுபெற்றவர் களுக்கு வழங்க அரசு 1137 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளி யிட்டிருந்தது. இதனை வரவேற்ற சிஐடியு, மற்ற கோரிக்கைகளுக்கும் கால நிர்ணயம் கோரி, கடந்த 15 நாட் களாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. பேச்சுவார்த்தை முடிவில் வட பழனி பணிமனையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அ. சவுந்தரராசன், “அதி காரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு மீண்டும் பேசுவதாக அமைச் சர் கூறியுள்ளார். நல்ல பதில் எதிர் பார்க்கிறோம். நல்ல பதில் சொன் னால் போராட்டம் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.