நீங்க சொன்ன செயல்பாடு எங்களுக்கு கொஞ்சம் தெரியல. இன்னும் ஒருவர் சொல்லியிருந்தார் இரண்டு கோடுகளும் வெட்டிக் கொள்கிறது. வேறு ஒன்னும் தெரியலன்னு சொல்லியிருந்தீங்க. முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். முக்கியமா கணக்குக்கு தேவை என்ன செய்து பார்ப்பதுதான். அது மட்டுமல்ல திரும்ப திரும்ப செய்து பார்ப்பதுதான்.
போனபகுதியில் பார்த்தால் தெரியும் ஏன் கிரேக்க கணித விஞ்ஞானிகள் முக்கியமாண வர்களாக ஆனார்கள் என்று. ஆம் அவர்கள் தான் முதன் முதலில் ஆய்வு நோக்கில் கணிதத்தைப் பார்த்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் கணிதத்தை அப்படியே பார்த்தவர்கள். ரோமன்களும், எகிப்தி யர்களும், மாயன்களும், இந்தி யர்களும் தாங்கள் கண்டறிந்த கணிதத்தை ஆய்வுக்கு உட்படுத்தல. மேலும் அதற்குள் என்ன ஒளிந்தி ருக்கிறது என்பதையும் பார்க்கல. அதை பார்க்க முன்வந்தவர்கள்தான் கிரேக்கர்கள். தேலஸின் பிந்தைய காலத்தில் புகழ் பெற்று இருந்தவர் பித்தா கரஸ். இவருடைய காலம் 570 முதல் 495 வரை என்று கூறப்படு கிறது. இன்றைக்கு கூட நாம் அவ ருடைய தேற்றத்தைப் படிக்கிறோம் இல்லையா. அவர் ஒரு வியாபாரி யின் மகன். அதனால் அவர் பல ஊருக்கும் செல்லும் வாய்ப்பை பெற்ற வர். இயற்கையாகவே வியாபாரி களுக்கு கணிதம் முக்கியம் என்ப தால் அவர் செல்லும் இடமெல்லாம் கணிதத்தைக் கற்றுக்கொண்டார். தேலஸ் போலவே இவரும் கணி தம் கற்பதற்காக எகிப்து சென்றார். மத குருக்கள் நடத்திய பள்ளியில் பல பரிசோதனைக்கு பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டார். குறிப்பாக அவர் கள் 40 நாள் உண்ணா நோம்பு இருக்க வேண்டும் என்று சொன்னார்களாம். அவரும் அதே போல் 40 நாட்கள் உண்ணா நோம்பு இருந்ததாக தக வல் சொல்லப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு கிரேக்கம் திரும்பி னார் பித்தாகரஸ். இப்போது அவர் கணக்கு வெறிபிடித்திருந்தார். எந்த அளவிற்கு என்றால் பித்தாகோரியன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் அள விற்கு.
அந்த கடுமை எப்படிப் பட்டது என்றால் இன்றைக்கு சீருடை என்கி றோமே அதை அன்றைக்கே கொண்டு வந்தவர். அனைவரும் வெள்ளை யுடை தான் உடுத்த வேண்டும். எளிமை யான சைவ உணவுதான் உண்ண வேண்டும். பீன்ஸ் சாப்பிட கூடாது. கண்டுபிடிப்புகள் அனைத்தும் கல்விக் கூடத்தின் பொது சொத்து. கண்டு பிடிப்புகள் வெளி உலகத்திற்கு சொல் லக் கூடாது. இது போன்ற கடுமையான விதிமுறைகளில் அவர் பள்ளி செயல் பட்டுது என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன். அப்படி என்ன புதுசா கண்டு பிடிச்சுட்டார் என்று தானே கேட்கி றீர்கள். நாம இன்றைக்கு பள்ளிக் கூடத்தில படிக்கிறோம் இல்ல பிதா கரஸ் தேற்றம் அந்த தேற்றத்தை நிரூ பித்தவர். அதற்கு முன் அது இல் லையா என்றால் உண்டு. ஆனால் நிரூ பிக்கப்படவில்லை. ஒரு செங்கோண முக்கோ ணத்தின் கர்ணபக்கத்தின் நீளத்தின் வர்க்கம் மற்ற இரண்டு பக்க நீளத்தின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம். அவருடைய கல்விக் கூடத்தின் கோட்பாடு என்பது ”எல்லாமே எண் கள் தான்”. எண்களுக்கு இடையிலான குணாதிசயங்களை சொல்லுவதற்கு என்று ஒரு தனிப்பிரிவு அவருடைய கல்வி கூடத்தில் இருந்தது. பித்தா கோரியன் எண்களை பற்றி ஆய்வு செய்யும் போது ஒற்றை எண்களின் கூடுதலை கண்டறிந்தனர். நாமும் நமது பத்தாம் வகுப்பு பாடத்தில் கூட படித்துக் கொண்டிருக்கிறோம் அதா வது ஒற்றை எண்களின் கூடுதல் என்பத மொத்த எண்ணிக்கையினை வர்க்கப் படுத்தினால் கிடைத்துவிடும். (முதல் n ஒற்றைப்படை இயல் எண் களின் கூடுதல் n2க்கு சமம்)
அது மட்டுமல்லாமல் பிதாக்கோரி யன்கள் ஒருங்கிணைந்த இசைக்கும், முழு எண்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை கண்டுபிடித்தனர். இசை குறித்தும் இசை கருவிகள் குறித்தும் கணிதத்தின் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகளை செய்தனர். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடும், நிரூபணத்திற்கு முக்கியத்துவமும் பிதாக்கோரியன்கள் கொடுத்தாலும் மத நம்பிக்கை மிக்கவர்களாகவும் உள்ளுர் அரசியலிலும் தலையிட்ட னர் . இதனால் கி.மு. 490களில் பிதாக்கோரியன்கள் உள்ளூர் அரசி யல்வாதிகளால் தாக்கப்பட்டார்கள். தப்பியோடிய பித்தாகரஸ் மெடா போன்டம் நகரில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஒரு சின்ன செயல்பாடு செய்ய லாமா. ஒரு காம்பஸ் எடுத்துக்கங்க. ஒரு வெள்ளை தாளில் ஒரு வட்டம் வரைங்க. அந்த வட்டத்திற்குள் ஒரு ஐங்கோணம் வரைங்க. இப்போது அந்த ஐங்கோணத்தின் மூலைவிட்டங் களை இணையுங்க. என்ன கிடைக்கி றது என்பதை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி போடுங்க.