டிரம்பின் 50% வரி விதிப்பைக் கண்டிக்கிறோம்; இந்தியாவுக்கு சீனா துணை நிற்கும்!
தூதர் ஸு பெய்ஹோங் பேட்டி
புதுதில்லி, ஆக. 22 - அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 50 சதவிகிதம் வரி விதித்திருப்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் சீனா அறிவித்துள்ளது. டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக, இந்தியா - சீனா இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, இந்தியா வந்திருந்தார். இங்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து வாங் யீ உரை யாடினார். இந்தப் பின்ன ணியில், இந்தியாவுக் கான சீன தூதர் ஸு பெய்ஹோங்பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்திருக்கிறது. மேலும் வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டுகிறது. இதனை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது, கொடுமைக்காரர்களுக்கு பலம் சேர்க்கும். எனவே, சீனா, இந்தியாவின் பக்கம் நிற்கும், நியாயத்துக்கு விரோதமான வரி விதிப்பு முறைகளை எதிர்க்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.