tamilnadu

img

நாங்களும்... நல்வனமும்... நம்பிக்கையும்...

ஓங்கிய
நம்  புவியின்
ஒற்றைத் தாய் 
இயற்கை

இயற்கையால்
படைக்கப்பட்ட
இந்தப் பரப்பு
மனிதர்களின்
“இருப்பிடம்” அல்ல 
அனைத்து
உயிர்களின்
“வாழிடம்”

மனிதர்களின்
ஆணவத்தால்
‘வாழிடம்’
‘பாழிடம்’
ஆவதைத்
தடுப்பதே
எங்களின் 
அடிப்படை நோக்கம்!

“காடு “அற்று போனால்
“நாடு “அற்றுப்
போகும்
“நாடு” அற்றுப் 
போனால்
நாம்
“நாதி” அற்றுப்
போவோம்
என்ற உண்மையை
உணரும்
தருணமிது!

இயற்கையோடு
இயைந்த
வாழ்வே
வளமானது,
நலமானது,
பலமானது,
என்ற
அடிப்படைவிதிகளை
மீறினால்
அகிலம்
அகால மரணம்
அடைவதை
யாராலும்
தடுக்க முடியாது 

கடந்த சில ஆண்டுகளாக
தொல்லை
மனிதர்களால்
தொடுக்கப்பட்ட
இயற்கைக்கு எதிரான
எல்லை
தாண்டிய
பயங்கரவாதம்,
வனங்களையும்  
அதைச்சார்ந்த 
இனங்களையும்
அழித்து, ஒழிப்பதை 
நாம் அறிவோம் 

இயற்கைத் தாயின்
இதயத்தில்
இறங்கிய
அடிகளையும்,
இடிகளையும்,
இயல்பாய்
பார்த்த
நேரடி சாட்சியங்கள்
நமது தலைமுறை 

சில
மானுடக் 
கிருமிகளின்,
அற்ப
ஆணவத்தால்,
சொற்ப
வனங்களும்,
சூரையாடப்படுவதை,
எம் போன்ற
இயற்கைப் போராளிகள்

இனியும்,,,

கைகட்டி
பொம்மைகளாய்
வாய்மூடி
மௌனிகளாய்
பார்த்துக்கொண்டு
இருக்க மாட்டோம்!

நாம்
வாழும் இடம்
வெறும்
‘பூமி’யல்ல
நம்மைக் காக்கும்
‘சாமி’ 

ஒரு நாட்டின்
வாழ்வாதாரத்தை
முடிவு செய்வது
பண பலமோ,
படை பலமோ,
அல்ல
அந்நாட்டின்
 *வன வளமே* 
என்ற
அரிய விதியை
இயற்கை பல 
தருணங்களில்
நமக்கு
புரிய வைத்திருக்கிறது

நாங்கள்
 *களமாட* 
வேண்டிய,
காட்டையும்,,
கடலையும்,,
மலையையும்,,
நீங்கள்
 *களவாடி* 
விற்றுவிட்டால்,
காப்பாற்ற
மண்ணில்
எதுவுமே
இருக்காது,,
ஏன்
 *மண்ணும்* 

கடல் அளவு
கனவுகள்,
வான்  அளவு
விருப்பங்கள்,
காடளவு
சிந்தனைகள்,,
மலை அளவு
லட்சியங்கள்,,,
கொண்டுள்ள
எம் போன்ற
இயற்கை
ஆர்வலர்கள்,,,,,
எங்கே
செல்வது???
யாரிடம்
சொல்வது???

 நாம்வாழும்
இடம்
நமக்கானது
மட்டுமல்ல,,
நம்மைவிட
மேலான
பல கோடி
உயிரினங்களும்
இந்த
உலகத்தின்
உறுப்பினர்கள்,,

அடுத்துவரும்
அனைத்து
தலைமுறைக்கும்
இந்த
உலகத்தை
ஒருபடியேனும்,,
உயர்த்தி
அளிப்போம்,,

வனம் காப்போம்
உயிர்
இனம் காப்போம்,,,

விடியாத 
இரவும்,,
விலகாத இருட்டும்,,
என்றுமே
நிலைத்ததாக
தரவுகள்
இல்லை,,

விடியலுக்கான
வெளிச்சக்
கீற்றாய்,,,
நாங்களும்,,
நல் வனமும்,,,,
நம்பிக்கையும்,,,

பா.சுப்ரஜா

11 -ஆம் வகுப்பு
PVM பள்ளி 
மாமண்டூர் 
செங்கல்பட்டு மாவட்டம்