tamilnadu

img

எமரால்டு அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

எமரால்டு அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

உதகை, அக்.11- குந்தா நீர்மின் உற்பத்திக்காக எமரால்டு அணையிலிருந்து திங்களன்று (நாளை) தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து குந்தா நீர்மின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம், காட்டுக்குப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீர் மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக, எமரால்டு அணையிலிருந்து அக்.13 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் எடக்காடு வழியாக குந்தா பாலம் அணையை சென்றடையும். எனவே, முள்ளிகூர், இத்தலார், பிக்கெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.