ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
பொள்ளாச்சி, அக்.24- ஆழியார் அணையிலி ருந்து பழைய ஆயக்கட்டு இரண் டாம் போக பாசனத்திற்காக வெள்ளியன்று தண்ணீர் திறக் கப்பட்டது. கோவை மாவட்டம், ஆனை மலையை அடுத்த ஆழியாறு அணையின் மொத்த கொள்ள ளவு 120 அடி. தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள நிலை யில், இரண்டாம் போக பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, ஐந்து வாய்க்கால்கள் வழி யாக ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 6,400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக அக்.24 முதல் ஏப்.15 ஆம் தேதி வரை தொடர்ந்து 173 நாட்களுக்கு 1143 மில்லியன் கன அடி நீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொ டர்ந்து வெள்ளியன்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல், அதிகாரி கள், விவசாயிகள் முன்னிலையில் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர்.
