tamilnadu

img

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு

தேனி ,ஜூன் 1- முல்லைப்பெரியாறு அணையி லிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்கு 300 கன அடி வீதம் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி தண்ணீர் திறந்து வைத்தார் . தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல்  சாகுபடி விவசாயம் நடைபெற்று வரு கிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பி யிருக்கும் இந்த விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்கு ஜூன் முதல் வாரம் பெரி யாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.   இந்த ஆண்டு அணை நீர்மட்டம் மே மாதத்தில் பெய்த மழையின் நீர் வரத்தால் 132 அடிக்கு குறையாமல் இருந்து வரு கின்ற நிலையில், ஜூன் முதல் தேதி யில் பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கு மாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் ஜூன் 1 அன்று காலை 10.30 மணிக்கு தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் தமிழக கூட்டுறவுத் துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர்  முரளீதரன், சட்டமன்ற உறுப்பி னர்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.