tamilnadu

img

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம், மே 24- காவிரி டெல்டா மாவட்ட விவ சாயத்திற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். குறுவை சாகுபடி மேற்கொள் வதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்  மட்டுமே உரிய தேதியில் தண்ணீ ரை திறக்க முடியும் என்பதால் இது வரை 18 முறை மட்டுமே குறிப்பிட்ட தேதியில் அணையிலிருந்து தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. போது மான நீர் இருப்பு இல்லாததன் கார ணத்தால் இதுவரை 60 முறை  காலதாமதமாக திறக்கப்பட்டுள் ளது. உரிய தேதிக்கு முன்னதாக இது வரை 10 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததன் காரணமாக குறு வை சாகுபடிக்கு குறித்த தேதியான ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை  திறக்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களா கவே பெய்து வந்த தொடர் கனமழை யின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தனது முழு கொள்ளளவான 120 அடியில் 117 அடியை எட்டியுள்ளது. இதனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக, செவ்வாயன்று (மே 24) அணையில் இருந்து குறு வை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப் படும் என முதலமைச்சர் மு.க ஸ்டா லின் அறிவித்தார். அதனை தொடர்ந்து மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் திங்களன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.அவருக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் காமலா புரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து செவ்வா யன்று காலை மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல் மட்ட மதகுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மின் விசையால் தூக்கி தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் இருந்து வெளியேறிய தண்ணீருக்கு மலர் தூவினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் தண்ணீர் தேவையை பொறுத்து நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது திறக்கப் பட்டுள்ள தண்ணீரானது கடைமடை பகுதி வரை சென்றடைய ஏதுவாக கடந்த மாதமே 80 கோடி ரூபாய்  செலவில் ஆறுகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. எனவே, தற்போது திறக்கப்படும் தண்ணீரை பயன் படுத்தி டெல்டா மாவட்ட விவசாயி கள் கூடுதல் சாகுபடி செய்து புதிய சாதனை படைக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அணையிலிருந்து பாசனத் திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின் உற்பத்தியும், 7  கதவணைகள் மூலம் 300 மெகா  வாட் மின் உற்பத்திசெய்யப்படஉள்ளது. வழக்கமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பருவமழையை எதிர் நோக்கி ஜூன் மாதத்தில்தான் குறு வை சாகுபடியை துவங்குவார்கள். அதனைத் தொடர்ந்து சம்பா பயிர்கள் சாகுபடியின் போது அவ் வப்போது ஏற்படும் வெள்ளப் பெருக் கில் பயிர்கள் சேதமடைந்து விவ சாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்னரே துவங்கும் வகையில் தற்போது மே மாதத்திலேயே அணை திறக்கப்படுகிறது. அதாவது மேட்டூர் அணையின் வரலாற்றில் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னரே கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

;