சென்னை,டிச. 26 அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் ்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைவருகிற 29ஆம் தேதி காலை 11 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளா கத்தில் மீண்டும் நடைபெற வுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் 31.8.2019 உடன் நிறை வடைந்தது. 14-வது ஊதிய ஒப்பந்த பேசி முடித்திருந்தால் தொழிலாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சம்பளம் உயர்ந்திருக்கும்.அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா முன்எச்சரிக் கையாக சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டி யுள்ளதால் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்கம் சார்பில் தலா 1 பிரதி நிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.