tamilnadu

img

அறந்தாங்கியில் வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்

அறந்தாங்கியில்  வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்

அறந்தாங்கி, ஜூலை 31-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளி யம்மனுக்கு, கடந்த 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல்லுடன் திருவிழா தொடங்கியது. 22 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை வீரமாகாளி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பிறகு,  தினசரி மண்டகப்படிதார்கள், அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இரண்டு நாள் நடைபெறுகிறது. புதன் மாலை பாலைவனம் ஜமீன் துரை தாமரைச்செல்வன் புதல்வர் செந்தில்குமார், தேர் வடத்தை தொட்டு கொடுக்க, நிலையிலிருந்து தேர் புறப்பட்டு பெரிய கடை வீதி வழியாக, எம்ஜிஆர் சிலை, ராஜேந்திர சோழீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாழன் மாலை அங்கிருந்து திருத்தேர் புறப்பட்டு பழைய ஆஸ்பத்திரி ரோடு வழியாக, பெரிய பள்ளிவாசல், ஆவுடையார் கோவில் சாலைவழியாக தேர் நிலைக்கு வந்தது.  மற்ற ஊர்களில் கோவிலை சுற்றி வரும் திருத்தேர், அறந்தாங்கியில் நல்லிநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பெரிய பள்ளிவாசலை சுற்றி வருகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அறந்தாங்கியில் வலம் வரும் வீரமாகாளி அம்மன் திருத்தேரைக் காண்பதற்கும், தேர் வடம் பிடித்து இழுப்பதற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.