tamilnadu

img

வசந்தபாலனின் புதிய முயற்சி... - சோழ. நாகராஜன்

எனது வழக்கமான பாணிப் படங்களிலிருந்து முற்றிலும் விலகிய வித்தியாசமான படம்தான் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கிற அநீதி திரைப்படம் என்று சொல்லியிருக்கிறார் அதன் இயக்குநர் வசந்தபாலன். ஜீ.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணாநிதி போன்றவர்கள் நடிக்கிற இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயில் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் இந்த அநீதியில் முழு கவனம் வைத்து உருவாக்கிவருகிறார். இதில் ஜீ.வி.பிரகாஷின் நான்கு பாடல்கள் உள்ளனவாம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் புதுமையானது என்கிறார் வசந்தபாலன். ஒரு வேறுபட்ட சினிமா அனுபவமாக இந்தப் படம் இருக்கும் என்கிற இயக்குநரின் நம்பிக்கை பலிக்கட்டும்.